ETV Bharat / state

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து மூணாறில் தமிழ் மக்கள் வேலை நிறுத்தம்!

மூணாறு வட்டவடாவில் அமையவிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து மூணாறு முழுவதும் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்!

author img

By

Published : Jul 16, 2022, 10:27 PM IST

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளின் வன எல்லையில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் மூணாறு வட்டவடா அருகில் அமையவிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூணாறு வட்டவடா நிலப்பாதுகாப்புக்குழு வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தியது.

இந்தப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் காய்கறி உள்ளிட்ட அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து வட்டவடாவில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், பாம்படத்தில் உள்ள சோழ தேசிய பூங்கா எல்லை அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

அப்போது, “வட்டவடா பகுதியில் காலம் காலமாக தங்கி இருக்கும் வனத்துறையினர், வட்டவடா பகுதியில் குடியிருப்புகளை ஆக்கிரமித்து தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தற்பொழுது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மண்டல அறிவிப்பினால், வட்டவடா ஏழை விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து மூணாறில் தமிழ் மக்கள் வேலை நிறுத்தம்!

வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும். வன உரிமைச்சட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: கேரளாவில் ஐந்து மாவட்டங்களுக்கு குரங்கம்மை தொற்று எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.