தேனி: சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தேனி மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் இடங்கள் குறித்தும், விபத்துக்கான காரணத்தை குறித்தும் விளக்கமாக பேசினார்கள்.
இறுதியாக பேசிய அமைச்சர் எ. வ. வேலு, 'பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மையினாலும், அலட்சியங்களாலும், ஏற்படுகிறது. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற 55,713 விபத்துகளில் 48,000 விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக நடந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை விட மாநிலகளில் அதிகளவு விபத்துகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 400 இடங்கள் அதிகளவு விபத்துகள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
விபத்தினை குறைக்கும் மாவட்டத்திற்கு முறையே 25 லட்சம், 13 லட்சம், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவையில் சாலை பாதுகாப்பு வார விழா