ETV Bharat / state

தேனி, வழக்குரைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை - வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்மகும்பல்

தேனி: வழக்குரைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கொலையாளிகளை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

வழக்கறிஞர் ரஞ்சித் குமார்
வழக்கறிஞர் ரஞ்சித் குமார்
author img

By

Published : Mar 7, 2020, 7:57 AM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பழைய பூமாலை திரையரங்கம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைகுலைந்து விழுந்தார். அவரை, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலைப்பகுதியில் அரிவாளால் பலமாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்த நபரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட நபரைக் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர், தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சார்ந்த கருணாநிதியின் மகன் ரஞ்சித் குமார்(42) எனத் தெரியவந்தது.

வழக்கறிஞர் கொலை

ரஞ்சித்குமார் தனது இரண்டு குழந்தைகளுடன், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார். உத்தமபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கறிஞர் இறப்பு குறித்து நபர் ஒருவர் பேட்டி

இந்த நிலையில், ரஞ்சிதை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள், உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து அனுமந்தன்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் வரை மோப்பம் பிடித்து ஓடிச் சென்று நின்றது.

இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.