ETV Bharat / state

தேனியில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை.! ஓபிஎஸ் பங்கேற்பு - டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்

தேனியில் 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் (divine world book of records) இடம் பெற்றுள்ளனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Jan 8, 2023, 1:39 PM IST

Updated : Jan 8, 2023, 6:54 PM IST

உலக சாதனை நிகழ்ச்சியில் ஓபிஎஸ்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ லட்சுமி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீ ஆனந்த் நாட்டியாலயா நாட்டிய பள்ளியை சேர்ந்த சுமார் 500 மாணவிகள் அம்மன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த உலக சாதனை முயற்சியில் நான்கு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் சுமார் 500 பேர் ஒன்றிணைந்து, அம்மன் பாடலுக்கு நடனம் ஆடினர். அம்மன் குழந்தை பருவம் முதல் அம்மன் வரை உள்ள பாடல்களுக்கு பரதநாட்டியம் நடனம் ஆடி, டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தால் (divine world book of records) அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தினார்.

பின்னர் பரதநாட்டியம் ஆடிய 500 நடன மாணவிகளுக்கு டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் சார்பாக சான்றிதழ்களை வழங்கப்பட்டது. முன்னதாக வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது

Last Updated : Jan 8, 2023, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.