ETV Bharat / state

இடுக்கியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை - வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய கேரளா

author img

By

Published : Aug 18, 2023, 2:17 PM IST

Kerala One Day Strike: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சிகளில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வலியுறுத்தி ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

Kerala Strike
Kerala Strike

இடுக்கி (கேரளா): கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வலியுறுத்தி ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வனப்பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களாக உள்ள சாந்தாம்பாறை, மூணாறு, சின்னக்கனால், தேவிகுளம் உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததைக் கண்டித்தும், சட்டப் பேரவையில் போதிய ஆய்வு பணிகளை செய்யாமல் தற்போது சட்டத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு, மேலும் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயப் பகுதிகளில் உள்ள பல்வேறு நிலப் பிரச்னையைத் தீர்க்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறி, இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் காங்கிரஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடுக்கி மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பேருந்துகள், ஆட்டோ போன்றவைகளும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது.

இன்று கேரளா இடுக்கி மாவட்டம் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழக-கேரள எல்லையோர பகுதியான குமுளியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும்பாலன பேருந்துகள் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொதுமக்கள் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

மேலும், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைகளுக்காக ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தினந்தோறும் சென்று வருவது வழக்கம். இன்று கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரை மட்டுமே சென்று திரும்பி வருகிறது.

இதையும் படிங்க: நாங்குநேரியைப்போல் மீண்டும் ஒரு சம்பவம்; பட்டியலின மாணவரை வீட்டிற்கு சென்று தாக்கிய மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.