ETV Bharat / state

வாக்காளர்களுக்கு மூக்குக் கண்ணாடி அணிவித்து பரப்புரை - தேர்தலில் வெல்ல பலே திட்டம்!

author img

By

Published : Dec 25, 2019, 1:19 PM IST

தேனி: பெரியகுளத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் தனது சின்னமான மூக்கு கண்ணாடியை வாக்காளர்களுக்கு அணிவித்து பரப்புரையில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

candidate
candidate

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வருகின்ற 30ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து தங்களுக்கு வழங்கிய சின்னங்களைக் கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பெண் வேட்பாளர் செல்வராணி செல்வராஜ் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட மூக்கு கண்ணாடி சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இதில் அவருடன் வரும் ஆதரவாளர்கள் மூக்குக்கண்ணாடி சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக வாக்காளர்களுக்கு மூக்குக் கண்ணாடியை அணிவித்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியகுளம் வேட்பாளரின் நூதன வாக்கு சேகரிப்பு

இது மட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு உடன் வரும் அனைவருக்கும் கூலிங் கிளாஸை மாட்டிவிட்டே அழைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக வாக்கு சேகரிக்கும் போது உடன் வரும் மூதாட்டிகள் கூலிங் கிளாஸ் அணிந்து மிடுக்காக வீதிகளில் வாக்கு சேகரித்து வருவது வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையும் வாக்கு: போலீஸ் கேண்டீனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - ரூ. 3 ஆயிரம் அபராதம்

Intro: பெரியகுளத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தனது சின்னமான மூக்கு கண்ணாடியை வாக்காளர்களுக்கு அணிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 30ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து தங்களுக்கு வழங்கிய சின்னங்களை கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊரட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் பெண் வேட்பாளர் செல்வராணி செல்வராஜ் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட மூக்கு கண்ணாடி சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதில் அவருடன் வரும் ஆதரவாளர்கள் மூக்குக்கண்ணாடி சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக வாக்காளர்களுக்கு மூக்குக் கண்ணாடியை வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Conclusion: இது மட்டுமல்லாமல் பிரச்சாரத்திற்கு உடன் வரும் அனைவருக்கும் கூலிங் கிளாசை மாட்டிவிட்டே அழைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக வாக்கு சேகரிக்கும் போது உடன் வரும் மூதாட்டிகள் கூலிங் க்ளாஸ் அணிந்து மிடுக்காக வீதிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.