ETV Bharat / state

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒருவர் கைது... தொடரும் சிபிசிஐடி விசாரணை - ரவிக்குமார் கைது

தேனி: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் ஆள்மாறாட்டம்
நீட் ஆள்மாறாட்டம்
author img

By

Published : Dec 4, 2019, 6:30 PM IST

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாக அவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், டேவிஸ் மற்றும் முகமது சபி என நான்கு பேருக்குத் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கியது. இதில் மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதிக்கு மட்டும் பிணை கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இதற்கிடையே சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். தொழிலதிபரான இவரது மகன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் தாக்கல் செய்திருந்தனர். இதில் மாணவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டது. அவரது தந்தையான ரவிக்குமாரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்த ரவிக்குமாரை சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரித்தனர்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்

இந்நிலையில் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவிக்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்பு தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தற்போது ரவிக்குமார் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில், அடைப்பதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

பேரறிவாளனின் தந்தைக்கு திலீபன் பார்த்த மருத்துவம்!

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது. தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை.

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவராகளது பெற்றோர் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. அதற்கு அடுத்தபடியாக அவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், டேவிஸ் மற்றும் முகமது சபி என நான்கு பேருக்கு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமின் வழங்கியது.
இதில் மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதிக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் உள்ளார். இதற்கிடையே சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னை கோபாலாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். தொழிலதிபரான இவரது மகன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கிடைத்த தகவலின்படி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவன் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்திருந்தனர். இதில் மாணவருக்கு மட்டும் ஜாமின் வழங்கப்பட்டது. அவரது தந்தையான ரவிக்குமாரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்த ரவிக்குமாரை சிபிசிஐடி போலீசார் நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவிக்குமாரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்பு தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தற்போது ரவிக்குமார் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இவ்வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.