ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை: மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு - Mullai periyar dam

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் குறித்து மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்கின்றனர்

முல்லைப் பெரியாறு அணை: மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

author img

By

Published : Aug 17, 2023, 4:53 PM IST

முல்லைப் பெரியாறு அணை: மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அணையின் பராமரிப்புப் பணிகள் குறித்தும் மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா் இன்று (ஆகஸ்ட் 17) ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி மத்திய நீர்வள தலைமை கண்காணிப்பு குழுவினர் அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரித்துக்கொள்ள மூவா் கொண்ட குழுவை நியமித்தது. மேலும் இந்த மூவா் உள்ள குழுவுக்கு உதவியாக 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் இன்று மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் சாம் இர்வின் , உதவி செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அனில் குமார் உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் இரவு நேர கார் ரேஸ்.. சென்னை வீதிகளில் சீறிப்பாய உள்ள கார்கள் - குஷியில் இளைஞர்கள்!

இந்த ஆய்விற்காக கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக அதிகாரிகள் தமிழக அரசு படகிலும், கேரள அதிகாரிகள் வல்லக் கடவு வழியாக சாலை மார்க்கமாக ஜீப் வாகனத்திலும் அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீா்வரத்து, நீா் வெளியேற்றம் மற்றும் மதகுப் பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

அதனைத் தொடா்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் இன்று மாலை துணைக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்கவும் உள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக் கொன்று ஆற்றில் வீச்சு.. தந்தை, மகள் உள்பட 8 பேர் கைது - தஞ்சாவூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.