தேனி: தமிழ்நாடு முழுவதும் விரைவில் தொடங்கப்பட உள்ள ஹெல்த்வாக் (நடைபயிற்சி) திட்டம் தொடர்பாக அதன் இடத்தை தேர்வு செய்வதற்கு தேனி மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்தார்.
தேனி அருகே உள்ள அரண்மனைப் புதூர் பகுதியில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தினை தேர்வு செய்து நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் போடி தொகுதிக்கு உட்பட்ட டொம்புச்சேரி, ஜங்கால்பட்டி கொட்டக்குடி, ராஜதானி, ஹைவேலிஸ் ஆகிய இடங்களில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது சுகாதார கட்டடம் உள்பட 5 கட்டடத்தை திறந்து வைத்தார்.
-
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #inspection pic.twitter.com/VgvLe6VY8u
— Subramanian.Ma (@Subramanian_ma) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #inspection pic.twitter.com/VgvLe6VY8u
— Subramanian.Ma (@Subramanian_ma) September 7, 2023தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #inspection pic.twitter.com/VgvLe6VY8u
— Subramanian.Ma (@Subramanian_ma) September 7, 2023
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நரம்பியல் பிரிவிற்கு புதிதாக உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது மருத்துவமனையில் இயங்கி வரும் ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஆய்வு மேற்கொண்டதில், பொதுமக்களிடம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு 2,500 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு பரிசோதனை எடுப்பது தெரிய வந்துள்ளது. காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுத்து தரப்படுகிறது.
ஆனால், பரிசோதனை எடுப்பதற்காக வந்திருந்த பொதுமக்களிடம் 10 நபர்களில் ஆய்வு மேற்கொண்டதில் ஏழு பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு எம்ஆர்ஐ ஸ்கேன் (MRI SCAN) எடுத்ததாக தெரிய வந்ததையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக ஒப்பந்தம் அடிப்படையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவமனைக்கு தேசிய நல்வாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் தரவிறக்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் மருத்துவமனைக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா மற்றும் கம்பம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தேனி அரசு மருத்துவமனை நரம்பியல் சிகிச்சைக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!