ETV Bharat / state

குற்றப் பின்னணி கொண்ட தூத்துக்குடி காவல் ஆய்வாளர்: அம்பலமான பகீர் தகவல்! - சாத்தான்குளம் விவகாரம்

தேனி: சாத்தான்குளம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மீது ஏற்கனவே குற்றவழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி காவல் ஆய்வாளர் மீது ஏற்கனவே வைகையில் வழக்கு!

author img

By

Published : Jul 1, 2020, 8:46 AM IST

Updated : Jul 1, 2020, 12:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் காவலர்கள் தாக்கியதாலே வியாபாரிகளான தந்தை – மகன் இருவர் பரிதாபமாக உயிரிழந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட மற்ற அலுவலர்களும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது ஏற்கனவே தேனி மாவட்டத்தில் வரதட்சணை, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த முதல் தகவல் அறிக்கையில், “தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வைகை அணையில் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர். இவரது உடன் பிறந்த சகோதர – சகோதரிகள் என ஆறு பேரும் வைகை அணை பகுதியிலே வசித்து வருகின்றனர்.

தூத்துக்குடி காவல் ஆய்வாளர் மீது ஏற்கனவே வைகையில் வழக்கு!
தூத்துக்குடி காவல் ஆய்வாளர் மீது ஏற்கனவே வைகையில் வழக்கு!

கலைவாணனின் மகன் தினேஷ்பாபுவிற்கும், கேரள மாநிலம் பாலக்காடு தாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது மகள் திவ்யாவிற்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து வரதட்சனை கேட்டு கலைவாணனும், அவரது குடும்பத்தினரும் திவ்யாவைத் தொடர்ந்து சித்ரவதை செய்துவந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் மனைவி திவ்யா, குழந்தைகளுடன் வசித்து வந்த தினேஷ்பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கலைவாணனின் சகோதரர்கள் மணிமாறன், ஸ்ரீதர், மணவாளன் ஆகிய மூவர் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளனர்.

அங்கு வீட்டிற்கு வந்த தினேஷ்பாபு குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த தினேஷ்பாபு மனைவி திவ்யாவை பழரசம் குடிக்குமாறு தினேஷ்பாபு தங்கையான மற்றொரு திவ்யா வற்புறுத்தியுள்ளார். பின்னர் அந்த பழரசத்தை தினேஷ்பாபு மனைவி திவ்யா குடித்து மயக்கமடைத்துள்ளார்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திவ்யாவை மீட்ட கணவர் தினேஷ்பாபு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அப்போதுதான் பழரசத்தில் விஷமருந்து கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தினேஷ்பாபு மனைவி திவ்யா குணமடைந்தார்.

இதனையடுத்து இந்த கொலை முயற்சி தொடர்பாக வைகை அணை காவல்நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். ஆனால் வழக்கில் தொடர்புடைய கலைவாணனின் சகோதரர் ஸ்ரீதர் காவல்துறை அலுவலர் என்பதால் வழக்கை எடுக்க வைகை அணை காவல்துறையினர் மறுத்து இழுத்தடித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் திவ்யா. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2019 ஜூலை 24ஆம் தேதி வைகை அணை காவல்நிலையத்தில் கலைவாணன்(62), அவரது மனைவி ராணி(58), மகள் திவ்யா(31), மருமகன் முகேஷ்(42), சகோதரர்கள் மணிமாறன்(55), ஸ்ரீதர்(56), மணவாளன்(59) ஆகிய ஏழு பேர் மீது வரதட்சனை கேட்டு திவ்யாவை சித்ரவதை செய்தும், பழரசத்தில் விஷமருந்து கொடுத்து கொலை முயற்சி செய்ததாக 294(b), 506(1), 498(A), 120B, 307 ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சாத்தன்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒலித்து வரும் சூழலில், தற்போது அண்ணன் மருமகளை வரதட்சனை கேட்டு கொலை முயற்சி செய்ததற்காக தேனியில் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

Last Updated : Jul 1, 2020, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.