ETV Bharat / state

150 அடி ஆழ கிணற்றிலிருந்து அழுகுரல்... மீட்கப்பட்டும் 4 வயது சிறுவன் உயிரிழப்பு! - Boy dies falling into well

தேனி: வடபுதுப்பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தண்ணீரில்லாத 150 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.

4 வயது சிறுவன் உயிரிழப்பு
4 வயது சிறுவன் உயிரிழப்பு
author img

By

Published : Jun 9, 2020, 7:23 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி (4) என்ற சிறுவனுடன் நேற்று (ஜூன் 8) மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், உறவினர்கள் அவரைத் தேடினர்.

பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் பெற்றோர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வடபுதுப்பட்டிக்கு விரைந்த காவல் துறையினர், சிறுவன் பாண்டியிடம் விசாரணை நடத்தி அவரையும் உடன் அழைத்துக்கொண்டு லோகேஷை தேடத் தொடங்கினர்.

அந்தத் தேடுதலில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தெருவிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் 150 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றிலிருந்து சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது.

உடனே கிணற்றில் பார்த்த காவல் துறையினர் சிறுவன் கிணற்றில் விழுந்து படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அறிந்தனர்.

மீட்புப் பணியின்போது

அதையடுத்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தேனி தீயணைப்புப் படை வீரர்கள் 11 பேர் கொண்ட குழு, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டனர்.

அதன்பின் சிறுவன் அவசர ஊர்தியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்; ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.

இது குறித்து அப்பகுதி மக்கள், பயன்பாடில்லாத கிணறுகளைத் தடுப்புக் கம்பிகள் மூலம் அடைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.