தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவி நீரானது குளிர்ச்சியாகவும், மூலிகைத் தன்மை வாய்ந்தாகவும் இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் ஆடி, தை உள்ளிட்ட முக்கிய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் தேனி மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சுரளி அருவிக்கு வந்து செல்வசெல்வர். கரோனா பரவலால் கடந்த மார்ச் முதல் சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியும் தடை செய்யப்பட்டது.
தற்போது, பல்வேறு மாவட்டங்களிலுள்ள சுற்றலாத் தளங்கள் திறக்க அனுமதியளித்துள்ள நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள அருவிகள், சுற்றுலாத் தளங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கின்றது.
இதனால், மஹாயள அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக சுருளி அருவிக்ககு வந்த பக்தர்களை வனத் துறையினர் திருப்பி அனுப்பிவைத்து வருகின்றனர்.
சுருளி அருவிக்கு வந்து ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் செல்லக்கூடிய முல்லையாற்றில் தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: ஆர்ப்பரித்து கொட்டும் அருவி: கழுகு பார்வையில் ஒகேனக்கல்!