ETV Bharat / state

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீர்வளத்துறை - Flooding in Vaigai River

தொடர் கனமழை காரணமாக வைகை அணையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Oct 17, 2022, 10:58 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக இன்று (அக்.17) காலை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் காலை 69.06 அடியை எட்டிய போது அணையில் இருந்து 699 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் மாலையில் இருந்து தொடர்ச்சியாக மிக அதிகமான மழை பெய்து வந்த நிலையில் வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

எனவே காலை 69 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக தற்போது 70 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 699 அடியிலிருந்து 7000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனால் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகமாக வருவதால் வைகை ஆற்றை கடக்கவும் அதில் இறங்கி குளிக்கவோ அதன் அருகில் செல்லவோ கூடாது என்று நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஏழாயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.