திமுகவின் முப்பெரும் விழா கணொலிக் காட்சி வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டத்தில் திமுக முப்பெரும் விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
தேனி, கம்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காணொலி உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் மீதான ஊழல் புகார் சிபிஐயிடமும், துணை முதலமைச்சர் மீதான ஊழல் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடமும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீதான 89 கோடி ரூபாய் புகார் தேர்தல் மற்றும் வருமான வரித் துறையிடம் உள்ளது. அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழலை சிபிஐ விசாரிக்கிறது. இந்த ஆட்சியில் தான் தலைமை செயலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை, சிபிஐயால் டிஜிபி விசாரிக்கப்படுகிறார். அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு ஒரே நாள் இரவில் அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பாவிற்கு திருட்டுத்தனமாக விற்க முயற்சி செய்தது, உள்ளிட்டவைகள்தான் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள்.
இந்த நூற்றாண்டு கரைகள் மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் சண்டை போடுவதாக மக்கள் முன்பாக நாடகம் ஆடுகிறார்கள். பதவியில் இருக்கும் வரையில் இருவரும் பிரியவே மாட்டார்கள். எது குணிந்ததோ, அது நன்றாகவே குணிந்தது, எது குணிகிறதோ, அது நன்றாகவே குணிகிறது, எது குணியவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே குணியவிருக்கிறது என சமீபத்தில் பகவத்கீதையை மேற்கோள் காட்டி ஓபிஎஸ்ஸின் டிவிட்டர் பதிவிற்கு வாட்ஸ்அப்பில் பதில் செய்தி வந்ததாகக் கூறி கிண்டலிடித்தார்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரத்தால் இந்து மதத்தைவிட்டு வெளியேறிய 236 வால்மீகிகள்...!