டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 10 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். அதனால் அம்மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு அந்தந்த மாநில் அரசுகள் தனிமைப்படுத்திவருகின்றன. அதன்படி, தேனி மாவட்டத்தில் இருந்து 21 பேர் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
அவர்கள் 21 பேரையும் மாவட்ட சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் உதவியுடன் கண்டுபிடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 24 பேருக்கு கரோனா!