ETV Bharat / state

மூன்று மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - chance to rain

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
கனமழை
author img

By

Published : Jun 14, 2021, 3:29 PM IST

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன்.14) இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை

  • மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வறண்ட வானிலை

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன்.15:

  • நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை
  • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன்.16,17:

  • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன்.18:

  • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
  • அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

வால்பாறை (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 8, தேவலா (நீலகிரி) 7, கூடலூர் பஜார் (நீலகிரி) 6, சின்கோனா (கோவை) 5, பெரியாறு (தேனி) 4, க்ளென்மோர்கண் (நீலகிரி) 3, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), போளூர் (திருவண்ணாமலை), தளி (கிருஷ்ணகிரி), உடுமல்பேட்டை (திருப்பூர்) தலா 1 செ.மீ முறையே மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூன்.14,15: மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன்.14,16: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன்.14,15: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

ஜூன்.14,17: கேரளா, கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன்.14,18: தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: 'சாராய பாட்டில்தான் எஞ்சாமி' - சூடமேற்றி எஞ்சாயி செய்த திமுக தொண்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.