ETV Bharat / state

’கிளீன் அண்ட் நீட்’.. புல்லை கழுவி உண்ணும் அரிக்கொம்பன் - Arikomban elephant

நெல்லை மாஞ்சோலை பகுதி காட்டுக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, புல்லை சாதுரியமாக கழுவி உண்ணும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரிக்கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சி

author img

By

Published : Jun 8, 2023, 8:47 AM IST

அரிக்கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சி

திருநெல்வேலி: தேனி மாவட்டம் கம்பம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் காட்டு யானை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. நெல்லை மேற்குதொடர்ச்சிமலையில் மணிமுத்தாறு அணை வழியாக கொண்டு செல்லப்பட்ட அரிக்கொம்பன் யானை, மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணைக்கு மேல் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் முத்துக்குழி வயல் என்ற இடத்தில் அரிக்கொம்பன் யானை பத்திரமாக விடப்பட்டது.

இந்த முத்துக்குழி வயல் அகத்திய மலை யானைகள் காப்பகமாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பலரை தாக்கிய மிகவும் அச்சுறுத்தல் வாய்ந்த இந்த யானையை நெல்லை மாவட்டத்தில் விடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவை இல்லாமல் வேறு ஒரு மாவட்டத்தில் இருக்கும் பிரச்னையை தங்கள் பகுதியில் இழுத்து விடுவதாக என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

அதேநேரம், முரட்டுத்தனமான அரிக்கொம்பன் யானையை நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவதுதான் சிறந்த நடவடிக்கை என்பது வனத்துறையின் முடிவாக இருந்தது. ஏனென்றால், தற்போது யானை விடப்பட்டுள்ள முத்துக்குழி வயல் என்ற பகுதி மிகவும் பசுமை வாய்ந்த பகுதியாக உள்ளது.

அங்கு யானைக்கு தேவையான பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அதேபோல் தண்ணீருக்கும் அங்கு பஞ்சம் இல்லை. எனவே, அரிக்கொம்பன் யானை தனது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கேயே இருந்து விடும் என்பது வனத்துறையின் கணிப்பு.

அதேநேரம், யானை விடப்பட்டுள்ள கோதையாறு வனப்பகுதிக்கு மிக அருகில்தான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அதேப் போன்று காரையாறு அணை அருகே காணி பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

எனவே, அரிக்கொம்பன் யானை மாஞ்சோலை மற்றும் காரையாறு வனப்பகுதிக்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பழங்குடி மக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அவர்கள் சந்தேகித்தபடியே முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, நேற்று (ஜூன் 7) கோதையாறு அணைக்கு வந்தது.

அங்கு அணையின் கரையோரம் யானை கூலாக தண்ணீர் அருந்தியது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், அணையைச் சுற்றி யானை வலம் வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது யானை அணைக்கு அருகில் கரையோரம் புற்களை மிக சாதுரயமாக கழுவி சாப்பிடும் வீடியோ காட்சிகள் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் அரிக்கொம்பன் யானை கரையில் உள்ள புற்களை தும்பிக்கையால் புடுங்கி, புற்களின் அடியில் உள்ள மண்ணை அணைத் தண்ணீரில் கழுவி அழகாக சாப்பிடுகிறது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது வனத்துறையின் திட்டப்படி அரிக்கொம்பன் வனத்தை விட்டு கீழே இறங்காமல் தனக்கான உணவுகளை அங்கேயே தேடிக் கொள்வது தற்போது உறுதியாகிறது.

அதன்படி வனப்பகுதியில் உள்ள பொருட்களை உண்ணும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், எந்த நேரமும் அரிக்கொம்பன் கீழே இறங்கி வரலாம் என்பதால் தொடர்ந்து மாஞ்சோலை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: Arikomban Elephant:'ஆட்கொல்லி அரிக்கொம்பன் வேண்டாம்' கம்பத்தை கதிகலங்க செய்த யானையை நெல்லைவாசிகள் எதிர்ப்பது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.