தேனி அருகே பெரியகுளத்தில் 'ஜாமிஆ அல்-அஷரத்துல் முபஷ்ஷரா' என்ற பெயரில் இறையியல் கல்லூரி நடைபெற்று வருகிறது. இந்த இறையியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் இஸ்லாமிய இறையியல் குறித்து பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த இறையியல் கல்லூரியில் 'திருக்குர்ஆன்' புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்து வருகின்றனர்.
இதில் 'திருக்குர்ஆன்' என்பது 30 பாகங்களாக கொண்டு 114 அத்தியாயங்களில் 6,666 வசனங்கள் கொண்டதாக மனித குலத்திற்கு தேவையான அனைத்து நல் விஷயங்களையும் இந்த திருக்குர்ஆன் கூறுகின்றது. இந்த இறையியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த திருக்குர்ஆனின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து வசனங்களையும் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்லூரியில் பயின்று வரும் பெரியகுளத்தைச் சேர்ந்த அஜீஸ் ரஹ்மான் என்பவருடைய மகன் 'அமானுல்லாஹ்' என்பவர், இந்த திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து ஒரே மேடையில் தொடர்ந்து பத்து மணி நேரத்தில் திருக்குர்ஆன் புத்தகத்தை பார்க்காமல் மனப்பாடமாக 6666 வசனங்களையும் ஓதினார்.
இந்த மாணவனை போன்று இந்த இறையியல் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் உள்ள 6666 வாசகங்களையும் மனப்பாடம் செய்து இதில் தேர்ச்சி பெற்றவர்களாக வர வேண்டும் என்பதற்காக இந்த இறையியல் கல்லூரியைச் சேர்ந்த 'முதல்வர் முஹம்மது ஹுசைன் மன்பஈ' இந்த இறையியல் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அந்த நிகழ்ச்சியில் அமானுல்லாஹ் என்ற சிறுவனை, இந்த திருக்குர்ஆனில் உள்ள 6666 வசனங்களையும் தொடர்ந்து பத்து மணி நேரத்தில் மனப்பாடமாக ஓதச்செய்தார்.
இந்நிகழ்வில் தேனி மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த திருக்குர்ஆன் வாசிப்பு நிகழ்ச்சியை கண்டு பயன் பெற்றனர்.
இதையும் படிங்க:டீ 42.85 ரூபாய், ஒரு முட்டை பப்ஸ் ரூ.38 - இது மும்பை இல்லீங்கண்ணா... நம்ம கோயம்புத்தூர்லங்ணோவ்!