நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை அருகே கிளண்டேல், சின்னக்கரும்பாலம், உலிக்கல் ஆகிய கிராமங்களுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 2 குட்டியுடன் கூடிய 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ம் தேதியிலிருந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் யானைகள் குன்னூர், நான்சச் எஸ்டேட் ட்ருக் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வலம் வந்துக் கொண்டிருப்பதால், எஸ்டேட் பணியாளர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்களுக்கு அடிக்கடி இந்த யானைக் கூட்டம் வந்து விடுவதால் பெரும்பான்மையான தேயிலைத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் உள்ளனர். மேலும் 14 பேர் கொண்ட வனக்குழுவினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என்ன ஒரு புத்திசாலித்தனம்.. வேலியில் ஷாக் அடிக்குதானு டெஸ்ட் பண்ண யானை..