நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குந்தா, கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதேபோன்று உதகை, குன்னூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் மூன்று ராட்சத மரங்கள் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் 30க்கும் மேற்பட்டோர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூரானது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: