கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது.
இதனிடையே, வார விடுமுறை தினமான நேற்று உதகையில் தற்போது நிலவும் இதமான சூழலை அனுபவிக்கவும், மகிழவும் படகு இல்லத்தில் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
சென்ற வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளோடு அமைந்த அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம் - மலர்த்தொட்டிகள் அடுக்கும் பணி தொடக்கம்
பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்...புன்னகையோடு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்..!