கேரளாவில் கொரோனா, பறவைக் காய்ச்சல், குரங்கு காய்ச்சலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாள்களாக தமிழ்நாடு கால்நடைத் துறை அலுவலர்கள் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் எட்டு சோதனைச் சாவடிகள அமைத்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கோழிகள், காடைகள், வாத்து, கொண்டுவர தடைவிதித்தனர்.
தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவிவிட்டதாக வதந்தி பரவியுள்ளது.
இதையடுத்து கால்நடைத் துறை அலுவலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள நாட்டுக்கோழி பண்ணைகளில் ஆய்வுமேற்கொண்டனர். அந்த ஆய்வில் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
இந்நிலையில் பண்ணை உரிமையாளர்களிடம், வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது, பண்ணையைச் சுற்றிலும் சுத்தமாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும், பண்ணை முழுவதும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் கொரோனா: பண்ணாரிஅம்மன் கோயில் விழா நடைபெறுவதில் சிக்கல்!