நீலகிரி: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தை அழகுpபடுத்த பூங்கா மற்றும் மலை பாதை ஓரங்களில் பல்வேறு மலர் செடிகள், வெளிநாட்டு மரங்களை நடவு செய்தனர்.
இவற்றை இன்றுவரை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் பாதுகாத்து பராமரித்து வருகின்றன. குறிப்பாக, ரெட்லீப் என அழைக்கப்படும் சிவப்பு இலை வண்ணத்தில் பூக்கும் மலர்கள் சாலையோரங்களில் பூத்து குலுங்குவது காண்போரை ஈர்க்கின்றன.
மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சி. இந்த மலர்கள், சீசன் நிறைவடைந்த பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறிவிடும் தன்மை கொண்டவை.
இவ்வகை மலர்கள், குன்னூர் மலை பாதை மற்றும் உலிக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரங்களில் ஏராளமாக காணப்படுகின்றன. பச்சை பசேல் என காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே சிவப்பு கம்பளம் விரித்தாற்போல இந்த மலர்கள் காட்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்!