மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது லோசன மழை பெய்து வந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளான கோத்தகிரி, உதகை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தனிந்து குளு குளு கால நிலை நிலவுகிறது.
கோடை சீசனில் கொட்டித்தீர்த்த இந்த கனமழை கேரட், உருளை கிழங்கு, முட்டை கோஸ் ஆகிய மலை காய்கறிகளுக்கும் தேயிலைக்கு உகந்ததாக இருந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளர். இதையடுத்து, குன்னுாரின் சில சுற்றுலா பகுதிகளில், பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.