உதகமண்டலம் அருகே மசினகுடி வனப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் மான் கொம்பு வைத்துள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்து வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வனத்துறையினர் சாமியப்பனிடம் விசாரிக்க செல்லும் போது, மான் கொம்புடன் கையும்களவுமாக பிடிபட்டார். மான் கொம்பு வைத்திருந்த சாமியப்பனை கைது செய்த வனத்துறையினர் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமியப்பனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.