நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யபடுகிறது. குறிப்பாக உதகையிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலும் அதிகமான விவசாயிகள் கேரட், உருளைக் கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மலை காய்களை பயிரிட்டுவருகின்றனர்.
தற்போது பல விவசாயிகள் கேரட் பயிரிட்டுள்ள நிலையில் ஒரு கிலோ கேரட் 90 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. விவசாய நிலங்களுக்கு வரும் வியாபாரிகள் ஒரு கிலோவிற்கு 70 முதல் 90 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். பல மாதங்களுக்குப் பின் நல்ல விலை கிடைத்துவருவதால் கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக கேரட் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெற்றுவருகின்றனர். அதேபோல உருளைக் கிழங்கும் 45 கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...'ஆக்ஸிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்'