ETV Bharat / state

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு - nilgiris

நீலகிரி: உதகை அருகே மாவனல்லா நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

fdas
dfas
author img

By

Published : Jul 22, 2021, 12:07 AM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சார்ந்தவர் இருதயராஜ். 62 வயதான அவர் தினந்தோறும் காலையில் மசினகுடியில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக செல்வது வழக்கம்.

அந்த வகையில் அவர் இன்று காலை (ஜூலை 21) இருசக்கர வாகனத்தில் மாவனல்லாவிலிருந்து மசினகுடிக்கு சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த ஒற்றை காட்டு யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது. அதில் இருதயராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருதய ராஜை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைகாக உதகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.