நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகாளாக விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அறுவாங்காடு முதல் தலைகுந்தா வரையிலான சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை வழக்கம் போல் 10-ற்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கான்கிரீட் தளம் அமைக்கத் திட்டமிட்டனர். அதற்காக பல டன் எடைகொண்ட கம்பிகளை வைத்துத் தடுப்புகள் அமைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி தடுப்பு அங்கு பணியில் இருந்தவர்கள் மீது சாய்ந்து விழுந்தது.
இந்த விபத்தில், சம்சூர்(25) என்ற இளைஞர் கம்பிகளிடையே சிக்கிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு படுகாயத்துடன் சம்சூரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.