நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தும் மண் சரிவும் ஏற்பட்டு பலத்த சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் உதகை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். பின்னர் அதை முடித்துக்கொண்டு இரவு திரும்பும் வழியில் பர்லியார் அருகே திடீரென அங்கு வந்த காட்டு யானை ஒன்று சாலையில் நின்று கொண்டு வாகனத்தை வழிமறித்தது. தொடர்ந்து அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் மூலம் சத்தம் எழுப்பப்பட்டு அந்த யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கியாரே செட்டிங்கா? - ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு