நீலகிரி: மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற டி23 புலி கடந்த மாதம் 15ஆம் தேதி உயிருடன் மசினகுடி வனப்பகுதியில் பிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக உயிருடன் பிடிக்கப்பட்ட இந்தப் புலியின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் புலிக்கு மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புலிக்குத் தொடர் சிகிச்சையால் முன்னங்கால் வீக்கம் குறைந்து வருவதாகவும், ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு அதிகரித்து வருவதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டி23 புலி ஆரோக்கியமாக உள்ளதாக புதிய வீடியோவை மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர்மழை காரணமாக தக்காளி விலை உயர்வு