ETV Bharat / state

நீலகிரியில் தொடங்கிய நகரும் நியாயவிலைக் கடை !

நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் குன்னூரில் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் .

author img

By

Published : Sep 26, 2020, 10:42 AM IST

நீலகிரியில் தொடங்கிய நகரும் நியாயவிலைக் கடை

தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஒவ்வொரு பகுதிகளிலும் செயல்பட்டு வந்த நியாய விலைக்கடைகள் இனி நமது வீடு தேடி வரும் வகையில் "அம்மா நகரும் நியாய விலை கடை" என்கிற பெயரில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்தி 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 11 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (செப் 25) குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதன் முறையாக இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்டேல் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று 11 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் உயிரிழந்த மகன்கள்: துக்கம் தாளாமல் மரணமடைந்த தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.