நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய இடங்களுக்கு வன பகுதியிலிருந்து விலங்குகள் உணவிற்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி நல்லப்பன் தெரு பகுதியில், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சிறுத்தை இரவு நேரத்தில் ஆடு, நாய்களை வேட்டையாடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, இதுகுறித்து குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலின் பேரில் குன்னூர் வனத்துறை வனச்சரகர் சசிகுமார் தலைமையில், 15 பேர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டம் குறித்து இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆவின் பால் தயாரிப்பு நிலையத்தில் தீ விபத்து!