ETV Bharat / state

யோகா கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வாங்கித் தந்தவர் மோடி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் - பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர்

கிராமப்புறங்களில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கிய இணை அமைச்சர் எல்.முருகன்

author img

By

Published : Jul 17, 2023, 9:38 AM IST

நீலகிரி: கிராமப்புறங்களில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கிய இணை அமைச்சர் எல்.முருகன்

உதகை அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பரிசுக் கோப்பைகளை வழங்கினார். அதன் பின்பு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக கிராமங்கள் மற்றும் மாவட்டங்கள் தோறும் உள்ள வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இதே போன்று ஃபிட் இந்தியா (Fit India) திட்டம், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். மேலும், யோகா கலை நமது நாட்டில் தொடங்கிய கலை என்றும், தற்போது யோகா கலையை உலகெங்கும் எடுத்துச் சென்று அதற்கு அங்கீகாரம் பெற வைத்தது பிரதமர் மோடி என்று அவர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா (Khelo India) திட்டம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: chocolate day: நீலகிரி ஹோம் மேட் சாக்லேட்டுகள்: சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு!

மேலும் பேசிய அவர், பரலட்டி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று இந்த கிராமத்திற்கும் மாவட்டத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளதாக பாராட்டினார். கேலோ இந்தியா திட்டம் இத்தகைய வீரர்களை அடையாளம் கண்டு அவர்கள் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். கடந்த சனிக்கிழமை நடந்த கால்பந்தாட்ட போட்டியினை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோகன்ராஜ் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமன், தொதநாடு படகர் சங்க தலைவர் பாபு மற்றும் தும்மனட்டி, பரலட்டி, சுற்றுப்புற கிராம தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மத்திய அமைச்சருக்கு படகர் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளான ஒன்னதலை, தும்மனட்டி அணிக்கு எல்.முருகன் வெற்றி கோப்பையை வழங்கினார்.

இதையும் படிங்க: நீலகிரியில் புதுப்பொலிவுடன் வளம் மீட்பு பூங்கா.. அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.