நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இந்த யானைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி, இன்று (டிச. 08) 15 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட யானைகள், வயது முதிர்ந்த யானைகள், யானைக்கன்றுகள் பங்கேற்கவில்லை.
மேலும் யானைகள் 20 கிலோ முதல் அதிகபட்சமாக 210 கிலோ வரை எடை கூடியிருப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வளர்ப்பு யானை சேரனின் உடல் எடை 210 கிலோ வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அட்டகாசம் செய்யும் ஒற்றைக் காட்டு யானை : கண்டுகொள்ளாத வனத்துறையினர்!