நீலகிரி: கடந்த நான்கு நாள்களாக மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் கூடலூர், பந்தலூர், தேவாலா மற்றும் சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை அதிகமாக பெய்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 06) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் அபாயகரமாக கண்டறியப்பட்டால் முகாம்களில் தங்கி கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், ஒருபக்கம் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திடீரென உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்