நீலகிரி: கரோனா தொற்று தமிழ்நாட்டில் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது. அண்டை மாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு இ- ரெஜிஸ்டர் செய்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ ரெஜிஸ்டர் மட்டுமின்றி ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செப். 11இல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு