நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் குன்னூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒருவருக்கு கரோனாவுக்கான அறிகுறி தென்பட்டதால் அவர் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை மூடப்பட்டன. தொடர்ந்து இந்தப் பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில் ஒரே வாரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உடல், மன ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் பருமனானவர்கள்!