நீலகிரி: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை கடந்த சில நாள்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து உதகை தலைமை மருத்துவமனையில் உள்ள 250 கரோனா படுக்கைகளுடன், சிறுவர்களுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உதகையிலுள்ள காவல் துறைக்குச் சொந்தமான சிறுவர் மன்றக் கட்டடத்தில் 180 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது,
“கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சை மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 18 ஆயிரம் பழங்குடியினருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும். அதில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளது. தேயிலைத் தொழிலாளர்களில் ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ரூ. 1.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமிதாப் பச்சன்