நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் குந்தா பிக்கட்டி மண்டல அளவிலான பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கீழ்குந்தா மண்டலத் தலைவர் கமலகண்ணன், பிக்கட்டி மண்டல அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, கடந்த மாதம் மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழையால் எடக்காடு - தங்காடு சாலைப்பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.