கரோனா பரவல் இரண்டாம் அலை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இருப்பினும், ஒரு சில இளைஞர்கள் ஊரடங்கை மீறி தங்களது ஆசைகளுக்காக பொது இடங்களில் விளையாடுவது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூரைச் சேர்ந்த முகேஷ்குமார், சந்தோஷ்குமார், முருகானந்தம், கபிலன் ஆகிய மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் நின்றபடி டிக்டாக் காணொலி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. மக்களை அச்சுறுத்தும்விதமாக பட்டாக்கத்தியுடன் காணொலி வெளியிட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.