ETV Bharat / state

கரந்தை கருணாசாமி ஆலயத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஏழூர் பல்லக்கு திருவிழா'

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஏழூர் பல்லக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 4, 2023, 10:57 PM IST

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா

தஞ்சாவூர்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூரை அடுத்த கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1988 ஆம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம், கண்ணாடி பல்லாக்கு, வெட்டிவேர் பல்லாக்கு ஆகியன ஏழு ஊர்களைச் சுற்றி வரும் விழா நடைபெற்றுள்ளது. காலப்போக்கில் இந்த விழா தடைபட்ட நிலையில், தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லாக்கு திருவிழா கடந்த மே 20ஆம் தேதி ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லாக்கு, சுவாமி கண்ணாடி பல்லாக்கிலும், வெட்டி வேர் பல்லாக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக இன்று (ஜுன் 4 ) நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர். அதைபோல, வெட்டிவேர் பல்லாக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

சிவகணங்கள் மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்தபடி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லாக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான,

1. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (கரந்தை),

2. அருள்மிகு தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோயில் (வெண்ணாற்றங்கரை),

3. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் ( திருதென்குடி திட்டை),

4. அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் ( கூடலூர் திருக்கூடலம்பதி),

5. அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் (கடகடப்பை),

6. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (திருப்புன்னை நல்லூர்),

7. அருள்மிகு பூமாலை வைத்தியநாதர் திருக்கோயில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் சுவாமி புறப்பட்டு சென்றன.

ஏழூர் புறப்பாடு முடிந்ததும் நாளை சுவாமி கோயிலுக்கு வந்தடைந்ததும் பக்தர்கள் மத்தியில் ஸ்ரீ சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் விமூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு சுவாமிமலையில் கூட்டு பிரார்த்தனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.