ETV Bharat / state

கரந்தை கருணாசாமி கோயிலில் ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் கோலாகலம்! - karunasamy temple

தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரந்தை கருணாசாமி கோயிலில் ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் கோலாகலம்

author img

By

Published : May 21, 2023, 12:17 PM IST

தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த கரந்தையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கருணாசாமி என்ற பெரியநாயகி அம்மன் உடனாகிய வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

அதேநேரம், இந்த திருக்கல்யாணம் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிகழ்வாகும். அந்த வகையில், நேற்று (மே 20) மாலை ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்த்து, ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாங்கல்ய தாரணம் மற்றும் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாக, கருங்குஷ்ட நோயினால் துன்பப்பட்ட சோழ மன்னனுக்கு சிவனார் வேங்கை வடிவில் தோன்றி விரட்டிய பின், அருகில் இருந்த குளத்தில் மறைந்து விட, அரசன் அக்குளத்தில் மூழ்கி எழுந்ததும் அரசனுக்கு இருந்த குஷ்ட நோய், ஈசனின் கருணையால் நீங்கப்பெற்ற கோயிலாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரும், அருந்ததியும் தம்பதியராக சிவபெருமானை பூஜித்த சிறப்புப் பெற்ற கோயிலாகவும் கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் திருவாசியில், எங்கும் ஒட்டாமல் முயலகன் மீது பதித்த வலது திருப்பாதத்தின் பிடிமானத்தில் மட்டும் ஆடிய பாதமாக காட்சியளிப்பது வேறு எங்கும் காண இயலாத காட்சியாக உள்ளது.

மேலும், இந்தக் கோயிலில் பங்குனி மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சூரிய உதயத்தின்போது, சூரிய ஒளி மகாதேவ லிங்கத்தின் மீது விழுந்து வணங்கி பூஜிப்பதாக ஐதீகம். அந்த நேரங்களில் சூரிய பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். மிக அரிதான திருமணக்கோல அர்த்தநாரீஸ்வரர் வடிவம் சிறப்பு வாய்ந்தது.

அதாவது, இங்கு உள்ள அர்த்தநாரீஸ்வரர் வலது புறம் உமையவளாகவும், இடதுபுறம் சிவமாகவும் காணப்படுகிறார். சிறப்பு வாய்ந்த கங்காள மூர்த்தி சிற்பம் உத்தமசோழன் காலத்தில் நிறுவப்பட்டது. இந்த மூர்த்தியை வழிபட பாவங்களில் இருந்து விடுதலையும், நல்ல மன உறுதியும் கிடைக்கும் எனவும், கடுமையான சுரம் போன்ற நோயுற்றவர்கள் திருக்குளத்தில் உள்ள நீர் கொண்டு வந்து வழிபட நோயின் கடுமை குறையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும், கோயிலின் தல விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரணி ஆகவும், பதிகம் திருநெடுந்தாண்டகம், ஆறாம் திருமுறை அப்பர் சுவாமிகள் வைப்புத் தலமாகவும் உள்ளது. இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த விழாவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, கோயில் மேற்பார்வையாளர் ஞானவேல் உள்ளிட்டப் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சோழர் படை கட்டிய பெருங்கருணை சிவன் கோயில்.. கல்லூரி மாணவியின் கள ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.