ETV Bharat / state

சர்ச்சையான அம்பேத்கர் போஸ்டர்: குருமூர்த்தி மீது பாய்ந்த குண்டாஸ்

கும்பகோணத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்தை சர்ச்சைக்குரிய விதத்தில், சித்தரித்து சுவரொட்டியாக ஒட்டிய வழக்கில் கைதான இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 21, 2022, 10:35 PM IST

சர்ச்சையான அம்பேத்கர் போஸ்டர்: குருமூர்த்தி மீது பாய்ந்த குண்டாஸ்

தஞ்சாவூர்: அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளான கடந்த டிச.6ஆம் தேதி, காவி உடையணிந்து, நெற்றியில் விபூதி பூசியிருப்பது போல அம்பேத்கரின் திருவுருவப் படத்தை சித்தரித்ததோடு, 'காவி(ய)தலைவன் புகழை போற்றுவோம்' என்ற வாசகங்களுடன் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று (டிச.21) உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் மாநகர் முழுவதும் குருமூர்த்தி ஒட்டிய போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், பெரியார் இயக்கங்களும் பல பகுதிகளில் போராட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

இதனிடையே, இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டிய குருமூர்த்தி உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிக உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, குருமூர்த்தி மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த கும்பகோணம் கிழக்கு போலீசார் அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் நீதிபதி உத்தரவின்பேரில் கும்பகோணம் கிளைச்சிறையில் அவரை அடைத்தனர். இந்நிலையில், இன்று அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து குருமூர்த்தி, கும்பகோணம் கிளைச் சிறையில் இருந்து அதிரடியாக இன்று திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, இவ்வழக்கில், சர்ச்சைக்குரிய சுவரொட்டி தயார் செய்த கணினி அச்சக உரிமையாளர் மணிகண்டன்(35) என்பவரும் கைது செய்யப்பட்டதோடு அவரும் நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்பேத்கர் மீது திணிக்கப்படும் இந்துத்துவம் - காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.