உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு வருகிற 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு எட்டு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
22 ஆயிரம் சதுர அடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்கள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 80 ஓதுவார்கள் திருமுறை, தேவாரம் ஓதி யாகசாலை பூஜையைத் தொடங்கினர்.
இந்த யாக சாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளைக் கொண்டு பூஜை நடைபெற்றது. இந்த யாக சாலை பூஜையில் தலைமைச் செயலாளர் சண்முகநாதன், தருமை ஆதீனம் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பல்வேறு நதிகளிலிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு புனிதநீர் வருகை