ETV Bharat / state

புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இடம்பெறும் தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி! - Tamil Nadu Handicrafts Development Corporation

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி

author img

By

Published : Aug 5, 2023, 5:16 PM IST

தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி

தஞ்சாவூர்: முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினை பொருட்கள் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக் கண்காட்சியினை மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் பூம்புகார் உற்பத்தி நிலையங்களில் கைதேர்ந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் தஞ்சாவூர் கலைத்தட்டுகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பதிக்கப்பட்டு கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களும், சுவாமிமலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட பஞ்சலோக கடவுளின் சிலைகள், நாச்சியார் கோயில் பித்தளை விளக்குகள் இடம் பெறுகின்றன.

இதையும் படிங்க: சென்னையில் நாளை கலைஞர் பன்னாட்டு மராத்தான்: வீரர்களே தயாரா!.....

மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், காட்டன் புடவைகள், அலங்காரப் பொருட்கள், காகித கூழ் பொம்மைகள், மதுரை வாகை குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், சிறிய வடிவத்தில் அழகிய நூற்றுக்கும் மேற்பட்ட பித்தளை பொருட்கள், மற்றும் நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தன மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் மற்றும் செம்மரக் கூழினால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், மரத்திலான விளையாட்டு பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதில் விற்பனையாகும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் ரூபாய் 75 முதல் ரூபாய் 2 லட்சம் வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூபாய் ஏழு லட்சம் ஆகும், இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், கைவினை பொருட்களை பயன்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் சிறப்பு கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் கொலு பொம்மைகள் கண்காட்சி, கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி, தீபாவளி, கிறிஸ்துமஸ் தின பண்டிகை கால கண்காட்சி ஆகியவை ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் தந்தையை காணாத ஏக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.