தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பூதலூர் தாலுகா உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய அடையாள அட்டை மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பழைய அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் அட்டையும், அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு முகாமில் மருத்துவ அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், இளநிலை மருத்துவ மறுவாழ்வு அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் தனி தாசில்தார் புண்ணியமூர்த்தி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து புதிய அடையாள அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகிய அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'