துலாம் மாதத்தில் மாதந்தோறும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள், கடைசி நாள் நீராடினால் புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்கவும், திருவையாறு புஷ்ய மண்டபத்தெரு காவேரி ஆற்று படித்துறையில் புனித நீராடி தர்பனம் செய்வும் தாசில்தார் நெடுஞ்செழியன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் தடை விதித்தனர். இத்தடையால் புஷ்யமண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.
திருவையாறு பகுதிகளிலுள்ள அனைத்து படித்துறைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் துறையினர், காவல் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் வெளியூரிலிருந்து வாகனங்களில் வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பிவைத்தனர். இருப்பினும், பொதுமக்கள் தடையை மீறி குடும்பத்தோடு பொன்னாவரை சாலையோரம் உள்ள காவேரி ஆற்றோரத்தில் குளித்து புனித நீராடி திருவையாறு ஐயாறப்பர் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஐயாறப்பர் ஆலயத்திலிருந்து சூலபாணி புறப்பட்டு காவேரி ஆற்று; புஷ்யமண்டபடித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையும் படிங்க:அணைகளுக்கு செல்ல தடை விதித்தும் தீபாவளியை கொண்டாட குவிந்த மக்கள்!