ETV Bharat / state

ராமலிங்கம் கொலை வழக்கு: ஷாலிக் வீட்டில் என்ஐஏ அதிரடி சோதனை! - NIA

தஞ்சாவூர்: திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான மைதீன் அகமது ஷாலிக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இன்று சோதனையிட்டனர்.

என்ஐஏ
author img

By

Published : Jul 3, 2019, 5:45 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம், அப்பகுதியில் நடக்கும் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஷாலிக் என்ற மைதீன் அஹமது ஷாலிக் என்பவரை விசாரணைக்காக கடந்த 25-ஆம் தேதி கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பிறகு மறுநாள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் , தென்காசி வருவாய் துறையினர் உள்ளிட்ட குழுவினர் ஷாலிக்கின் வீட்டில் சோதனைட்டு அவரது பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கைபற்றியதாக தெரிகிறது.

ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான ஷாலிக் வீட்டில் என்ஐஏ அதிரடி சோதனை

இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், "இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கும் இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றும், வழக்கறிஞர் சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரப்பரப்பான நிலை நீடித்தது.

Intro:திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட
ஷாலி என்ற மைதீன் அகமது ஷாலி-யின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை. Body:தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். வேலைக்கு ஆட்களை அழைக்கச் சென்ற இடத்தில், இஸ்லாமியர்கள் சிலர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த படுகொலை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த ஷாலி என்ற மைதீன் அஹமது ஷாலி என்பவரை விசாரணைக்காக கடந்த 25-ஆம் தேதி கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பிறகு 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள், தென்காசி வருவாய் துறையினர் உள்ளிட்ட குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை நடத்திய குழுவினர் அவரது வீட்டில் இருந்து வெளிநாட்டு நாணயங்கள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த அவரது உறவினர்கள் தரப்பில் இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கும் இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றும், வழக்கறிஞர் சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரப்பரப்பான நிலை நீடித்தது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.