உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்கிடையில் பிரதோஷமான இன்று(அக்.14) நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பெருவுடையாருக்கு ஏற்ற 13 அடி நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியபெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏழு மாதங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு காரணமாக பெரிய கோயிலில் பக்தர்கள் யாருக்கும் அனுமதிக்காமல் இருந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்