அயோத்தி தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாவதையொட்டி காவல் துறையினர் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் ஆகியோர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள் கூடுதலாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் காவல் துறையினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஜமாத்தார்கள் ஆகியோர் மத்தியில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் பேசுகையில், ’அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் நமக்குத் தேவை. தீர்ப்பு சாதகமாக வந்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்கவும் ஆரவாரம் செய்யவும் கூடாது. அதே போல தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை மனப்பக்குவத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்றார்.
இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் உள்ள ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டனர். அதேபோல கட்சி நிர்வாகிகள் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குட் பை சொல்லும் 'அம்மா குடிநீர்’